யாழில் ஐந்து தினங்களுக்குள் ரி.ஐ.டியினரால் 10 பேர் கைது
பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் (ரி.ஐ.டி) யாழில் ஐந்து தினங்களுக்குள் பத்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொழும்பு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் தற்போது பாடசாலைகளில் கல்வி கற்று வரும் மூன்று மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் இடம் பெறும் வாள்வெட்டுச்சம்பவங்கள் மற்றும் அண்மையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தமை போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் மேற்குறித்த கைது நடவடிக்கைகள் தொடர்சியாக இடம்பெற்று வருகிறது.
கொழும்பில் இருந்து வருகை தந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் என தம்மை அடையாளப்படுத்தி மேற் குறிப்பிட்ட கைதுகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த 5 ஆம் திகதி கொக்குவில்,சில்லாலை, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 3 இளைஞர்களும், கடந்த 6 ஆம் திகதி சுன்னாகம், மருதனார்மடம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்களும், கடந்த 7, 8 ஆம் திகதிகளில் கொக்குவில், திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் நிரூசன் என்ற இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இதேவேளை கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் தமது முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளனர்.
அதில் சிவில் உடையில் வந்தவர்களால் மேற்குறித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்தமைக்கான காரணங்கள் எவையும் இதுவரை தமக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழில் ஐந்து தினங்களுக்குள் ரி.ஐ.டியினரால் 10 பேர் கைது
Reviewed by Author
on
November 10, 2016
Rating:

No comments:
Post a Comment