அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை விட ஹிலாரியின் வாக்குகள் 1.5 மில். அதிகம்....
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ஹிலாரி கிளின்டனின் வாக்கு எண்ணிக்கை வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பை விடவும் மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்க தேர்தல் முறையில் உள்ள வாக்காளர் குழு முறையால் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் தொழிலதிபரான குடியரசு கட்சியின் டிரம்பிடம் தோல்வி அடைந்தார்.
தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்கள் எட்டப்படும் நிலையில் இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதன்படி மொத்த வாக்குகளில் ஹிலாரி 1.5 மில்லியனுக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
ஏ.பி செய்தி நிறுவனம் கடந்த சனிக்கிழமை வெளியிட்ட எண்ணிக்கையின்படி ஹிலாரி 1,569,824 வாக்குகளால் முன்னிலையில் உள்ளார்.
இதன்படி ஹிலாரி 48 வீத வாக்குகளை வென்றிருப்பதோடு டிரம்ப் 47 வீத வாக்குகளையே பெற்றுள்ளார்.
வாக்காளர் குழு முறையில் தீர்க்கமான மாநிலமாக இருக்கும் புளோரிடாவை டிரம்பால் கைப்பற்ற முடிந்ததே அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் டிரம்பினால் மொத்தம் 290 வாக்களர் குழுவை வெல்ல முடிந்ததோடு ஹிலாரி 232 வாக்காளர் குழு பிரதிநிதிகளையே வென்றார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை விட ஹிலாரியின் வாக்குகள் 1.5 மில். அதிகம்....
Reviewed by Author
on
November 22, 2016
Rating:

No comments:
Post a Comment