மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை நாடகப் போட்டியில் தேசியரீதியில் 2 இடம்
மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற மீலாத் விழா நாடகப் போட்டியில் இரண்டாம் இடத்தினையும்,வடமாகாணத்தில் 1ம் இடத்தினையும் பேச்சுப் போட்டியில் செல்வன் ராசாத் மூன்றாம் இடத்தினையும் பெற்று சாதனை நிலைநாட்டியதோடு
மாகாண மட்டத்தில்
பின்வரும் மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்
முதலிடம் :
-----------------------
1 - நளர் ஆசிப் அஹ்மத் - ஆங்கில பேச்சு
2 - R. ராஸாத் - பேச்சு தமிழ்
3 - R. சன்ஜிதா - பேச்சு தமிழ்
4 - N.F. ஸஹ்லா - பேச்சு தமிழ்
5 - M.F.F. சனா - ஆக்கம்
6 - H.A.F.பசாஹ் - ஆக்கம்
7 - J.M. அபாம் - கிரா அத்
-----------------------------------------
இரண்டாம் இடம் :
------------------------------
1- சல்மாஹ் நளர்- பேச்சு ஆங்கிலம்
2- M.J.M.ஹஸன்- பேச்சு
3- A.F.நிஸ்மா - பேச்சு
4- M.N.நபீஸ்- பேச்சு
5- A.J.M.அஸ்மி - பேச்சு
6-S.M.ஸாஜித் - ஹிப்லுல்
7-M.R.M.நுஸ்லி -ஹிப்லுல்
8-U.F.M.பஸ்ரின்-கிரா அத்
9-M.Z.I.அபாரின்-சிறு கதை
10- A.M.ஆயிஷா பர்வின் -ஆக்கம்
மூன்றாம் இடம் :
---------------------------
1- H.M.ஹனீஸ்- ஹிப்லுல்
2 - N.F.ஹஸானா - எழுத்தனி
வலய மட்டத்தில்
21 மாணவர்கள் முதலிடத்தினையும்
10 மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும்
04 மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்
வெற்றிபெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் இன்று 09-11-2016 காலை வெற்றீட்டிய மாணவர்கள் வீதிபவனியாக அழைத்து வரப்பட்டு அம்மாணவர்களை மன்னார் வலயக்கல்விபனிப்பாளர் திருமதி S சுகந்தி செபஸ்ரியன் உட்பட ஏனைய கல்வி அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.
அகில இலங்கை ரீதியில் நாடகப் போட்டியில் இரண்டாம் இடத்தினைபெற்ற மாணவர்களும் அவர்களை பயிற்றுவித்து வழிகாட்டிய அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் வாழ்த்துத் தெரிவித்த வலய கல்விப்பனிப்பாளர் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கிறோம்.

மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை நாடகப் போட்டியில் தேசியரீதியில் 2 இடம்
Reviewed by Author
on
November 09, 2016
Rating:

No comments:
Post a Comment