மன்னார் முசலி பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களை நிரந்தரமாக குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு முசலி பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு- கண்டன பேரணியும் முன்னெடுப்பு-Photos
தென்னிலங்கை மீவர்களின் மித மிஞ்சிய வருகை,அவர்களின் தொழில் முறமைகளினால் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,மற்றும் தென்னிலங்கை மீனவர்களை நிரந்தரமாக குடியமர்த்தி தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து இன்று புதன் கிழமை(9) காலை முசலி பிரதேச மீனவர்கள் கண்டன ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர்.
முசலி பிரதேச மீனவ சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று (9) புதன் கிழமை காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் பிரதான வீதியில் ஒன்று கூடிய முசலி பிரதேச தமிழ்,முஸ்ஸிம் மீனவர்கள் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டனர்.
இதன் போது ஊர்வலத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு,கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
கொக்குப்படையான் பிரதான வீதியில் ஆரம்பமான குறித்த கண்டன ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று முசலி பிரதேசச் செயலகத்தினை சென்றடைந்தது.
இதன் போது கடந்த காலங்களில் யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச மக்கள் இடம் பெயர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஏனைய மாவட்டங்களிலும் வாழ்ந்து வந்தனர்.
தற்போது கட்டம் கட்டமாக மீள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
குறித்த முசலி பிரதேச மக்கள் சுமார் 75 வீதமானவர்கள் மீன் பிடித்தொழிலையே மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த காலங்களிலும்,தற்போதும் தென்னிலங்கை மீவர்களின் மித மிஞ்சிய வருகை மற்றும்,அவர்களின் தொழில் முறமைகளினால் தாம் தொடர்ச்சியாக பாதீக்கப்பட்டு வருவதாகவும்,இரு மீனவ சமூகங்களுக்கும் இடையில் இன முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு வருகின்றது.
ஏற்கனவே முசலி பிரதேச மீனவர்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட இருந்த சமயம் முசலி பிரதேசச் செயலாளரின் கோரிக்கைக்கு அமைவாக முசலி பிரதேசச் செயலகத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு உறுதிமொழிகளை முன் வைத்தார்.
எனினும் வழங்கப்பட்ட உறுதிமொழிகளுக்கு அமைவாக இது வரை எவ்வித வடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
-இந்த நிலையில் தற்போது தென்பகுதி மீனவர்களை 'பாம்படிச்சான் ஓடை' என்ற பகுதியில் குடியமர்த்தப்படவுள்ளதாக தெரிய வருகின்றது.
அவர்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.
-எனவே அவர்கள் குடியமர்த்தப்படும் பட்சத்தில் ஏமது மீனவர்களுக்கு ஏற்படும் தொழில் பாதீப்புக்கள்,முரண்பாடுகள்,சிறு மீனவர்களின் வாழ்வாதார பாதீப்புக்கள் ஏற்படுவதோடு,எதிர்காலத்தில் எமது மீன்பிடி இறங்கு துறைகளும் இழக்க வேண்டிய வாய்ப்பு ஏற்படும் என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
-மேலும் முசலி பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரங்களில் உள்ள இறங்கு துறைகள் சிலவற்றை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனால் எமது பிரதேச மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.எனவே முசலி பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் வருகையினையும்,அவர்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே குறித்த செயற்பாடுகளை நிறுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முசலி பிரதேச மீனவர்கள் முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்ததோது,தமது கோரிக்கை அடங்கிய மகஜரையும் கையளித்தனர்.
இதன் போது மீனவர்கள் சார்பாக அங்கு வருகை தந்திருந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரிடமும் மீனவர்கள் தமது கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்துள்ளதோடு,குறித்த பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் முசலி பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களை நிரந்தரமாக குடியமர்த்தும் நடவடிக்கைகளுக்கு முசலி பிரதேச மீனவர்கள் எதிர்ப்பு- கண்டன பேரணியும் முன்னெடுப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
November 09, 2016
Rating:
No comments:
Post a Comment