சரித்திரத்தில் முதல்தடவை! பௌத்த தீவிரவாத அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும்
பௌத்த தீவிரவாத அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ய வேண்டும், குறிப்பாக பௌத்த தீவிரவாத அமைப்பாக செயற்படுகின்ற பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் தடைசெய்யப்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
செங்கலடி பிரதேசத்தில் இன்றைய தினம் நடைபெற்ற இந்து மதகுருக்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இந்த நாட்டின் சரித்திரத்திலேயே இன்று தான் எங்களுடைய இந்து மத குருமார்கள் முதல் தடவையாக வீதியில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நாட்டிலே இந்து மத குருமார்களோ கிருஸ்தவ மதகுருமார்களோ வீதிகளில் இறங்கி போராடியவர்கள் இல்லை, அதற்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்றால், மிகக்கேவலமாக நடந்துகொண்ட மதகுருக்களை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்தின தேரரே காரணம்.
இந்த நாட்டிலே இந்து மத குருமார்களோ கிருஸ்தவ மதகுருமார்களோ இலங்கை சரித்திரத்தில் நேரடியாக தனது மதத்தை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களும் இல்லை வரப்போவதும் இல்லை.
அவ்வாறானவர்கள் இன்று போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
நல்லாட்சி அரசு இனவாதம் பேசுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளபோதும் அது இன்று வரை நடைபெறவில்லை. எனவே அதனை நடைமுறைப்படுத்த மிக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
சரித்திரத்தில் முதல்தடவை! பௌத்த தீவிரவாத அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும்
Reviewed by NEWMANNAR
on
November 23, 2016
Rating:

No comments:
Post a Comment