அண்மைய செய்திகள்

recent
-

அமெரிக்காவில் கூட இந்து சமய பீடம் உண்டு, ஆனால் நம் நாட்டில் இல்லை - யோகேஸ்வரன் ஆதங்கம்


2016 ஆம் ஆண்டினை விட 2017 ஆம் ஆண்டில் உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சிற்கு 8,015 மில்லியன் ரூபா நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(23) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவிக்கையில்,

2016 ஆம் ஆண்டு உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சிற்கு 171,420 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இம்முறை ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த முறையை விடவும் 8,015 மில்லியன் ரூபா குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இந்து சமய பீடமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் பல தடைவைகள் உரையாற்றியிருக்கிறேன்.

இருப்பினும் அது தொடர்பில் எதுவித நடவடிக்கைகளும் இது வரையில் முன்னெடுக்கப்படவில்லை.

இந்த பல்கலைக்கழகத்தில் 400 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்து நாகரீகத் துறையில் பயில்கிறார்கள். இவர்களுக்கு இந்து சமய பீடமொன்று மிகவும் அவசியமாகும்.

தென்னாபிரிக்கா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட தமிழ் மக்கள் மிகவும் குறைவாக வாழும் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்து சமய பீடம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் குறித்த நாடுகளை விடவும் ஒப்பீட்டளவில் தமிழ் பேசும் மக்கள் அதிகளவில் வாழும் நம் நாட்டில் இந்து சமய பீடங்கள் பல்கலைக்கழகங்களில் இல்லாதிருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் சட்டம் மற்றும் கடல்வளத்துறை ஆகிய பாடத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் வாழும் மக்கள் மிகவும் சிரமப்படுவது போக்குவரத்திற்கு காரணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அதிகளவான பாலங்கள் மிக பழைமையானவையாகவும் அவை புனரமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்தின் போது பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். இதற்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என வலியுருத்தினார்.

தொடர்ந்தும், கல்முனை பிரதேசத்தில் வாழும் மக்கள் தொழிலை முன்னேற்றுவதற்கு பெரும் சிரமத்திற்கு முகங்கொடுத்து வருகிறார்கள். எனவே கல்முனை பகுதியில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்கல்லூரிகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என கூறியமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கூட இந்து சமய பீடம் உண்டு, ஆனால் நம் நாட்டில் இல்லை - யோகேஸ்வரன் ஆதங்கம் Reviewed by NEWMANNAR on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.