அண்மைய செய்திகள்

recent
-

விடுதலைப் புலிகள் மீது தீரா வைராக்கியம்..! வடக்கு முதல்வர் ஆவேசம்....


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெறுவதற்கு முன்னரே தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்து வந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையிலேயே விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே வட மாகாண முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விடுதலைப் புலிகள் தொடர்பாக சிங்கள மக்கள் மனதில் தீராத வைராக்கியம் காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாகவே, வடக்கில் மக்கள் எந்த விதமான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும் குறை கூறுகின்றனர். அத்துடன், விடுதலைப் புலிகள் மீண்டும் வந்துவிடுமோ என்றும் எண்ணுகின்றனர்.

எனினும், அவ்வாறு சிந்திப்பவர்கள் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் சிந்திக்கவில்லை எனவும் வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், வடக்கு மக்களின் பிரச்சினைகள் நிவர்த்திசெய்யப்படுமாயின் இவ்வாறன எண்ணங்களுக்கு, சிந்தனைகளுக்கும் இடமில்லாமல் போய்விடும்.

இதேவேளை, வடக்கில் செயற்படும் ஆவா குழுவின் பின்னணியில் அரசியல்வாதிகளோ, தமிழ் மக்களோ அல்லது இராணுவ புலனாய்வாளர்களோ இருக்கலாம்.

எனினும், அதனை ஆராய்ந்து பாராமல் நாம் எதனையும் கூற முடியாது. அதற்கான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகள் மீது தீரா வைராக்கியம்..! வடக்கு முதல்வர் ஆவேசம்.... Reviewed by Author on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.