லண்டனில் டிராம் கவிழ்ந்து பாரிய விபத்து! பலர் பலி!
லண்டனில் இன்று காலை டிராம் தடம் புரண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
Croydon என்ற இடத்தில் இன்று அதிகாலை 6 மணியளவில் வந்து கொண்டிருந்த இரு அடுக்கு கொண்டு டிராம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இருப்பினும் தெளிவான தகவல்களை தற்போது கூற முடியாது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
டிராம் டிரைவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டிராமை வேகமாக ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கிய பலர் மீட்கப்பட்டுள்ளர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
லண்டனில் டிராம் கவிழ்ந்து பாரிய விபத்து! பலர் பலி!
Reviewed by NEWMANNAR
on
November 10, 2016
Rating:

No comments:
Post a Comment