மன்- எழுத்தூர் RCTMS பாடசாலையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த....
மன்னார் எழுத்தூர் RCTMS பாடசாலையில் இவ்வருடம் 2016ஆண்டிற்கான புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 09-11-2016 அன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
புலமைப்பரீட்சையில் 17 மாணவமாணவிகள் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் 100 வீதம் சித்தியடைந்த 17 மாணவர்களினையும் அவர்களுடன் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகள் பெற்ற
மாணவி பெயர் புள்ளி மாவட்ட நிலை
- யோகேஸ்வரன் நிவேதிகா 156 75
- இந்திரன் நிர்த்திக்கா 156 86
மாணவர்களை பாரட்டிக்கௌரவிக்கும் நிகழ்வினை பாடசாலை அதிபர் திருமதி ம.றோய் ரமேஸ்குமார் அவர்களின் தலைமையில் எழுத்தூர்ப்பங்கின் பங்குத்தந்தை அருட்பணி யேசுராஜா அடிகளருடன் யதீஸ்புத்தகசாலை உரிமையாளர் S.R.யதீஸ் அவர்களின் நிதிப்பங்களிப்பில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சாதனைச்சூரியன் பாராட்டுச்சாண்றிதழும் அவர்களை பயிற்றுவித்த V.M.சேவியர் அவர்களுக்கும் பரிப்பொருளும் அன்பளிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் பாடசாலைச்சமூகம் கலந்து சிறப்பித்தனர்.
மன்- எழுத்தூர் RCTMS பாடசாலையில் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த....
Reviewed by Author
on
November 10, 2016
Rating:

No comments:
Post a Comment