அண்மைய செய்திகள்

recent
-

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான திருமண பந்தம் - விளக்குகின்றார் சீ.வி....


தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான திருமண பந்தத்தை விட தமிழ் மக்களுக்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளை கண்டறியுமாறு தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று மும்மொழிகளிலும் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான திருமண பந்தம் பற்றி ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஆரம்பத்தில் இது தொடர்பாக தம்மிடம் வினவியதாகவும், திருமண தொடர்பை விட தமிழர்களின் தேவைகளையும் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியையும் முதலில் பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.


Marriage between Sinhalese and Tamils : Explains CV
மேலும், தமது இரு பிள்ளைகளும் சிங்களவர்களையே திருமணம் முடித்திருப்பதையும் இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நினைவுபடுத்தியமை குறிப்பிடத்தக்கது.


சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான திருமண பந்தம் - விளக்குகின்றார் சீ.வி.... Reviewed by Author on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.