அண்மைய செய்திகள்

recent
-

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள்! ஆபத்தான கட்டத்தில் உயிர்கள்! காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை...


இலங்கையை சேர்ந்த 9 மாலுமிகள் தீவிரவாதிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா எல்லையில் அமைந்துள்ள ஹுடைடா துறைமுகத்தில் தீவிரவாத குழுக்களினால், இவர்கள் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஷேயா எவிலோன் கப்பலில் சேவை செய்த இலங்கை மாலுமிகள் 9 பேர் கடந்த 2 மாதங்களாக இவ்வாறு பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் தங்களை மீட்குமாறும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் கப்பல் நிறுவனமான கிரீஸ் டீல் நிறுவனத்திற்கு சொந்தமான ஷேயா எவ்லோன் கப்பலை மாற்றப்படும் போது இலங்கை மாலுமிகள் தீவிரவாதிகளால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக கப்பலின் மாலுமி ஒருவர் தொலைப்பேசி ஊடாக தெரிவித்துள்ளார்.

இந்த மாலுமிகளுக்கான 2 மாத சம்பளம் உட்பட எந்தவித கொடுப்பனவுகளையும் குறித்த கப்பல் நிறுவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் குடும்பத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை மீட்பதற்கு கப்பல் நிறுவனம் எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்களை பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு, இந்த தீவிரவாத குழுக்கள் கீரஸ் கப்பல் நிறுவனத்திற்கு கோடி கணக்கில் பணம் கோரியுள்ளதாகவும், கப்பல் நிறுவனம் அந்த பணத்தை செலுத்தாமல் சட்ட ரீதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்களை தடுத்து வைத்துள்ள துறைமுகத்திற்கு அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து டிசம்பர் நடுப்பகுதியில் குண்டு தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளன. இதன்போது தங்களை பணயக்கைதிகளாக எடுத்துக் கொள்வதற்கு தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரதேசம் குறித்த தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும், அவர்களின் அனுமதியின்றி யாருக்கும் அந்த பிரதேசத்தை நெருங்குவது மிகவும் கடினமாகும். சில கப்பல்கள் மாத்திரம் அந்த துறைமுகத்திற்கு நுழைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் அந்த துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் இலங்கையின் தூதரகம் இல்லை. எனினும் சவுதி அரேபியாவின் தூதரகம் மாத்திரம் அருகில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளமையினால் சர்வதேச ஆதரவு பெற்றுக் கொண்டேனும் விரையில் தங்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தங்களின் சம்பளப்பணத்தை குடும்பத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அந்த மாலுமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பணயக்கைதிகளாகியுள்ள மாலுமிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சிற்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விடுவித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஓமான் மஸ்கட் நகரத்தில் அமைந்துள்ள தூதரகத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள்! ஆபத்தான கட்டத்தில் உயிர்கள்! காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை... Reviewed by Author on November 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.