குஞ்சுக்குளம் பகுதியில் கிறவல் மண் அகழ்வு செய்யப்பட்ட இடத்திற்கு மன்னார் நீதவான் விஜயம்-கிறவல் மண் அகழ்வதற்கான தடையும் நீடிப்பு-Photos
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் கிறவல் மண் அகழ்வு செய்யப்பட்டு வந்த நிலையில் மக்களின் எதிர்ப்பையடுத்து மன்னார் நீதிமன்றத்தினால் குறித்த கிறவல் மண் அகழ்வு பணிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அப்பகுதியில் கிறவல் மண் அகழ்வுக்கு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இன்று(10) வியாழக்கிழமை தடை விதித்துள்ளார்.
குஞ்சுக்குளம் பகுதியில் கிறவல் மண் அகழ்வு செய்யப்படும் இடத்திற்கு இன்று(10) வியாழக்கிழமை மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விஜயம் செய்திருந்தார்.
இதன் போது நீதிமன்றத்தினால் அழைப்பு விடுக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன் போது குறித்த கிராம மக்கள் மற்றும் உரிய திணைக்கள அதிகாரிகள் ஆகியோரிடம் விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கிறவல் மண் அகழ்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார்.
இந்த நிலையில் குறித்த பகுதியில் கிறவல் மண் அகழ்வுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கிறவல் மண் அகழ்வதற்கான தடையினை மன்னார் நீதவான் நீடித்தார்.
குஞ்சுக்குளம் கிராம மக்கள் சார்பாக சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தார்.
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக கிறவல் மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றமையினால் அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்து குறித்த கிராம மக்கள் கடந்த 26 ஆம் திகதி கிறவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குஞ்சுக்குளம் கிராமத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் ஒன்றினைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற மடு பொலிஸார் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளமையினை கருத்தில் கொண்டு மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த பகுதியில் தற்காலிகமாக கிறவல் மண் அகழ்வை மேற்கொள்ள தடை விதித்ததோடு தொடர்ச்சியாக விசாரனைகள் இடம் பெற்று வந்தது.
இந்த நிலையிலே மன்னார் நீதிமன்னத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று (10) வியாழக்கிழமை கிறவல் மண் அகழ்வு செய்யும் இடத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகளும் சென்றிருந்தனர்.
இந்த நிலையிலே குறித்த பகுதியில் கிறவல் மண் அகழ்வதற்கு நீடிக்கப்பட்டிருந்த தடையினை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குஞ்சுக்குளம் பகுதியில் கிறவல் மண் அகழ்வு செய்யப்பட்ட இடத்திற்கு மன்னார் நீதவான் விஜயம்-கிறவல் மண் அகழ்வதற்கான தடையும் நீடிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
November 10, 2016
Rating:
No comments:
Post a Comment