துரையம்மா அன்பகத்தினர் கள்ளியடி கிராமத்தின்.....
மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தினர் கள்ளியடி கத்தாளம்பிட்டி கிராமத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்சிசியாக வழங்கி வருகின்றனர் தங்களது 2017 ஆண்டுக்கான கொடுப்பனவு மற்றும் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பெற்றோர்களின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடல் இன்று 10-11-2016 மாலை 3-30 மணியளவில் கள்ளியடி கத்தளம்பிட்டி கிராமசேவகர் தலைமையில் மாதர்சங்க உறுப்பினர்கள் WARD தலைவி உட்பட தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் சாரம்சமாக தற்போதைய வாழ்க்கைச்சூழலில் பொருளாதாரப்பிரச்சினையினால் கல்வியைதொடர முடியாத நிலையில் நிறைமாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் அவ்வாறில்லாமல் எமக்கான கல்விச்செயற்பாட்டை சேவையாக ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தினர் தொடர்ந்து தமது சேவையை செயலாற்ற நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் அவர்களுடன் இணைந்து செயற்பட்டால் எமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடு நல்ல முன்னேற்றத்தினை அடைவதோடு வளமான கல்விச்சமூகத்தினை உருவாக்கலாம் என்றார் கிராமசேவகர்.
அமைப்பின் தலைவர் தனது கருத்தில் எமக்கான ஒத்துழைப்பினை வழங்குவதானால் நாங்கள் எங்களால் இயன்றளவு கல்விச்செயற்பாட்டுக்கு உதவி செய்வோம் தேவைகளோடு நிறையமாணவர்கள் உள்ளார்கள் கிடைக்கின்ற சேவையை பெற்று அதை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் கலந்துரையாடல் 4-45மணிக்கு நிறைவுற்றது…
துரையம்மா அன்பகத்தினர் கள்ளியடி கிராமத்தின்.....
Reviewed by Author
on
November 10, 2016
Rating:

No comments:
Post a Comment