வரலாற்றில் இன்று! லண்டனில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் 12,000 பேர் உயிரிழப்பு!
டிசம்பர் 4 (December 4) கிரிகோரியன் ஆண்டின் 338 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 339 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 27 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1952
லண்டனை குளிர் மேக மூட்டம் சூழ்ந்தமையால் காற்று மாசடைந்து அடுத்தடுத்த வாரங்களில் மட்டும் 12,000 பேர் கொல்லப்பட்டனர்.
1259
பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் படி நார்மண்டி உட்பட ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும் முடிவாகியது.
1639
ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.
1791
உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி ஒப்சேர்வரின் முதலாவது இதழ் வெளிவந்தது.
1829
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்க ஆளுநர் வில்லியம் பெண்டிங்க் பிரபுவால் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1918
முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெரிக்க அதிபர் வூட்ரோ வில்சன் பிரான்ஸ் சென்றார். பதவியில் உள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.
1943
இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியாவின் எதிப்புத் தலைவர் யோசிப் டீட்டோ "சனநாயக யூகொசுலாவிய அரசு" ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.
1945
ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.
1957
ஐக்கிய இராச்சியத்தில் லூவிஷாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
1958
பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் டொஹெமி சுயாட்சி உரிமை பெற்றது.
1959
ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.
1967
வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாம் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதினர்.
1971
இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐநா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.
1971
பாக்கித்தானின் கடற்படையினரையும் கராச்சி நகரையும் இந்தியக் கடற்படையினர் தாக்கினர்.
1976
ஆச்சே விடுதலை இயக்கம் அமைக்கப்பட்டது.
1977
மலேசியாவின் விமானம் ஒன்று கடத்தப்பட்டு ஜொகூர் என்ற இடத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
1984
குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.
1984 - 1984
மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.
1991
டெரி அண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.
1991
ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
1992
ஐக்கிய அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்பியது.
2005
ஹொங்கொங்கில் பல்லாயிரக்கணக்கானோர் சனநாயகம் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வரலாற்றில் இன்று! லண்டனில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் 12,000 பேர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
December 04, 2016
Rating:

No comments:
Post a Comment