வவுனியாவில் விபத்து - ஒருவர் படுகாயம்-Photos
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்து கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றை முச்சக்கர வண்டி ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாணிச்சூர் பகுதியில் பணி புரியும் ரூபன் என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது போதையில் வாகனம் செலுத்திய குற்றசாட்டின் பெயரில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி தப்பி ஓடிய வேளையில் அப்பகுதியில் நின்றவர்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் முப்பது நிமிடம் வாகன போக்குவரத்து தடைப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் விபத்து - ஒருவர் படுகாயம்-Photos
Reviewed by NEWMANNAR
on
January 21, 2017
Rating:

No comments:
Post a Comment