பிரித்தானியா, அமெரிக்காவை வீழ்த்துவதற்கு புதிய போர் விமானங்களை களமிறக்கிய ரஷ்யா!
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை வீழ்த்துவதற்கு புதிய வகை போர் விமானத்தை ரஷ்யா களமிறக்க உள்ளதாகவும், அதற்கான வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யா போருக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் Sukhoi-35s என்ற புதிய ரக போர் விமானத்தை ரஷ்யா வாங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான சோதனை ஓட்டத்திலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளது.
இது ஒரு பண்முகத்தன்மை கொண்ட போர் விமானம் என்றும் அதிவேகமாக செயல்படும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
சீனா ஏற்கனவே 24 Sukhoi-35s போர் விமானங்களை 2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியுள்ளதாக, பிரபல ஆங்கில நாளிதழ் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
மேலும் இந்த Sukhoi-35s வின் அதிக அளவு வேகம் 36,000 அடி உயரத்தில் Mach 2.25 அளவு இருக்கும் என்றும் சுமார் 8000 கிலோ கொண்ட வெடி பொருட்களை 1000 மைல் வரை எடுத்துச் செல்லும் திறன் உடையது என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி Sukhoi-35s போர் விமானம் F-16 மற்றும் அமெரிக்காவின் புதிய போர் விமானமான F-35 ஐ விட சிறந்தது என்றும் யூரோபைட்டர் டைபானை (RAF) விட மிக வேகமாக செயல்படும் திறன் கொண்டது எனவும் கூறப்படுகிறது.
பிரித்தானியா, அமெரிக்காவை வீழ்த்துவதற்கு புதிய போர் விமானங்களை களமிறக்கிய ரஷ்யா!
Reviewed by Author
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment