ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் கிளிநொச்சியில் நேற்று அங்குரார்ப்பணம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் நடைமுறைப் படுத்தப்படும் வீட்டுத்திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக் கான தூதுக்குழுவின் தூதுவர் ஹிடுங்லாய் மர்கியு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் மருதநகர் கிராமத்தில் இரண்டு வீட்டுத் திட்ட பயனாளிகளின் வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.கிளிநொச்சி மாவட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையில் 860 வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இதற்காக ஆறு இலட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு வீட்டுத்திட்டத்துக்கும் வழங்குவதோடு, வாழ்வாதாரத்துக்கும் நிதி உதவிகள் வழங்கப்படவுள்ளது.
வீட்டுத்திட்டத்தை ஹாபிடாட் பேரர் ஹியுமானிட்டி நிறுவனமும் பயனாளிகளுக்கான வாழ்வாதாரத்தை வேல்ட் விசன் நிறுவனமும் முன்னெடுக்கவுள்ளன.இங்கு கருத்து தெரிவித்த ஜரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுக்குழுவின் தூதுவர் ஹிடுங் லாய் மர்கியு ஐரோப்பிய ஒன்றியம் 2005 முதல் இலங்கையில் பணியாற்றி வருகிறது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 2 ஆயிரத்து 455 வீடுகளை அமைப்பதற்கு உதவியுள்ளோம்.இத்திட்டத்தின் கீழ் தனியே வீடுகளை மாத்திரமன்றி மீள் குடியேறியுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் உதவிகளை வழங்கி வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வீட்டுத்திட்டம் கிளிநொச்சியில் நேற்று அங்குரார்ப்பணம்
Reviewed by Author
on
February 18, 2017
Rating:

No comments:
Post a Comment