வவுனியாவில் இந்துமத வழிமுறைகள் நூல் வெளியீடு...
வவுனியாவில் பண்டிதர் வீரசிங்கம் பிரதீபனின் வழிபடுத்தும் இந்துமத வழிமுறைகள் நூல் வெளியிட்டு விழா இடம்பெற்றுள்ளது.
இந்த நூல் வெளியிட்டு விழா, வவுனியா பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
பண்டிதர் வீரசிங்கம் பிரதீபனின் கன்னி நூலான இந்த நூலின் வெளியீட்டு விழா வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
வெளியீட்டு விழாவில், பிரதேச செயலாளர் கா.உதயராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் மொழி அகளங்கன், தமிழருவி சிவகுமாரன், மூத்த ஊடகவியலாளர் அருணா செல்லத்துரை,
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.சிறீனிவாசன், மற்றும் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் கல்விமான்கள், கல்வியற்கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த நூலில் இந்து மதம் காட்டும் கூட்டு முயற்சியும் ஒற்றுமையும், விருந்தோம்பல் பண்பாடு, இந்து மதம் கூறும் நடை, உடை, பாவனை போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இந்துமத வழிமுறைகள் நூல் வெளியீடு...
Reviewed by Author
on
June 26, 2017
Rating:

No comments:
Post a Comment