மலாலாவின் முதல் டுவிட் இதுதான்....அரை மணி நேரத்தில் 100K பாலோயர்ஸ்:
மிகக் குறைந்த வயதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், பாகிஸ்தானின் பெண்கள் கல்வி ஆர்வலருமான மலாலா டுவிட்டரில் தமது முதல் டுவிட்டை பதிவு செய்துள்ளார்.
பாகிஸ்தானியரான மலாலா தற்போது பிரித்தானியாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அங்கேயே தமது கல்வியையும் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று டுவிட்டர் பக்கத்தில் தமது முதல் டுவிட்டை பதிவு செய்துள்ளார் மலாலா. மட்டுமின்றி அவர் டுவிட்டரில் தமது முதல் பதிவிட்ட அரை மணி நேரத்துக்குள் ஒரு லட்சம் ஃபாலோயர்ஸ்களை கடந்துள்ளார்.
டுவிட்டரில் அவர் பதிவிட்ட அனைத்து டுவீட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அவரின் டுவீட்களின் விவரம், "ஹாய் டுவிட்டர். பள்ளிப் படிப்பில் இன்று எனது கடைசி நாள். ஆனால், டுவிட்டரில் முதல் நாள்.
பள்ளிப் பருவம் முடிந்தது சற்று வருத்தமாக இருந்தாலும், எனது எதிர்காலத்தை நினைத்து உற்சாகமாக இருக்கிறேன். பல லட்சக்கணக்காக பெண்கள், பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத சூழலில் கஷ்டப்படுகின்றனர்.
அடுத்த வாரம் முதல், மத்திய கிழக்கு ஆப்ரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்கா சென்று, அங்குள்ள பெண்களைச் சந்திக்க உள்ளேன்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட கதை உண்டு. கல்வி மற்றும் சம உரிமைக்காகப் போராட பெண்களின் குரலே சிறந்த ஆயுதம். ட்விட்டர் மற்றும் பொதுவெளியில் பெண்களுக்காக நான் குரல் கொடுப்பேன். என்னுடன் நீங்களும் இணைவீர்களா?" என்று பதிவிட்டுள்ளார்.
மலாலா கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே டுவிட்டரில் இணைந்திருந்தாலும், இன்று தான் தமது முதல் டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாலாவின் முதல் டுவிட் இதுதான்....அரை மணி நேரத்தில் 100K பாலோயர்ஸ்:
Reviewed by Author
on
July 08, 2017
Rating:

No comments:
Post a Comment