விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் 5 ஆண்டு நிறைவு நிகழ்வு....
விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு நிறைவு அகவை விழா மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கிரான்குளம் சீ.மூன்.காடின் மண்டபத்தில் நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஆன்மீக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜீ, ஸ்ரீமத் சுவாமி ஸ்ரீவாசானந்தஜீ மகராஜ், மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர் ஆ.நவேஸ்வரன் மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் வஜிர பெரேரா மற்றும் சர்வதேச தொழில் ஸ்தாபன தேசிய திட்ட இணைப்பாளர், ஆர்.சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், நிகழ்வின் நினைவாக பாசறை நூல் வெளியீட்டு நிகழ்வும், விசேட அதிதிக்கான கௌரவிப்பு நிகழ்வும், விவேகானந்தா கல்லூரியில் புதிய வகுப்பிற்கான ஆரம்ப நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது.
விவேகானந்த தொழில்நுட்பக் கல்லூரியின் 5 ஆண்டு நிறைவு நிகழ்வு....
Reviewed by Author
on
July 06, 2017
Rating:

No comments:
Post a Comment