பல்கலை மாணவர்கள் கல்வியை மேற்கொள்வதற்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கி வைப்பு...
வவுனியா - ஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு ஓமந்தை கமநல சேவைகள் நிலையத்தில் கமநல அபிவிருத்தி உத்தியோகஸ்தர் க. திலீபன் தலைமையில் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர். எம். பி. றோஹண புஸ்பகுமாரவும், சிறப்பு விருந்தினராக உதவி ஆணையாளர் கமநல அபிவிருத்தி திணைக்களம். ஆர். விஜயகுமார் கலந்து கொண்டு ஓமந்தை கமநல அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் ஊடாக பல்கலைக்கழகம் செல்லும் வசதியற்ற ஓமந்தை பகுதி விவசாயிகளின் பிள்ளைகள் 4 பேருக்கு முதற்கட்டமாக மாதாந்த உதவி புலமைப்பரிசிலினை வழங்கி வைத்துள்ளனர்.
ஓமந்தை கமநல பிரதேச விவசாயிகளின் பிள்ளைகளின் கல்வியினை அபிவிருத்தி செய்வதே கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் நோக்கம்.
இந்த செயற்றிட்டத்தினூடாக எதிர்காலத்தில் பல பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை வழங்கி வைக்கப்படவுள்ளது.
இதனுடன் இணைந்ததாக வசதியற்ற 7 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நிகழ்வில் நிதியத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர், உப செயலாளர், கமநல சேவைகள் நிலையத்தின் உத்தியோகஸ்தர்கள், கமக்கார அமைப்பின் உறுப்பினர்கள். பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
பல்கலை மாணவர்கள் கல்வியை மேற்கொள்வதற்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கி வைப்பு...
Reviewed by Author
on
July 06, 2017
Rating:

No comments:
Post a Comment