முல்லைத்தீவில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் வீதியில் சுனாமி நினைவாலயத்துக்கு முன்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நீர்த்தாங்கி அமைப்பதற்காக துப்பரவு செய்யப்பட்ட காணியில் நிலக்கண்ணிவெடிகள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த காணிகள் அடங்கிய பகுதி ஏற்கனவே கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கண்ணிவெடி அகற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த பகுதியில் இன்று கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இதற்கு முன்னர் வெடிபொருள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த பகுதியை அண்மித்த பகுதிகளை மீண்டும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டுக்கு உட்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் மீண்டும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க மக்கள் கோரிக்கை
Reviewed by NEWMANNAR
on
July 20, 2017
Rating:

No comments:
Post a Comment