மாற்றாற்றல் கொண்ட குடும்பஸ்தர் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் -
மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வந்த மாற்றாற்றல் கொண்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், இன்றைய தினம்(28) இடம்பெற்றுள்ளதாக படுகாயமடைந்தவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலின் போது குடும்பஸ்தர் திடீர் சுகவீனமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
தலைமன்னார் கிராமத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகுதி போதைப்பொருள் கடந்த சனிக்கிழமை(25) இரவு மீட்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட லக்ஸ் மடுத்தீன்(வயது34) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த குடும்பஸ்தரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது தலைமன்னார் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம்(28) பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணையின் போது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது, திடீர் சுகவீனமடைந்த குறித்த நபர் தலைமன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல்களின் போதே குறித்த நபர் திடீர் சுகவீனமடைந்துள்ளதாகவும், தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்க தலைமன்னார் பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றாற்றல் கொண்ட குடும்பஸ்தர் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் -
Reviewed by Author
on
November 29, 2017
Rating:

No comments:
Post a Comment