ஜெயம் ரவியின் 24-வது படத்தின் முக்கிய அறிவிப்பு
ஜெயம் ரவியின் 24வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், அந்த படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகி இருக்கிறது.
சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி - நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்'. இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி இருக்கும், இப்படம் வருகிற குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
இந்த படத்திற்கு பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையில் ஜெயம் ரவியின் 24-வது படமாக உருவாகும் இந்த படத்தின் தலைப்பு நாளை (டிசம்பர் 14) நள்ளிரவு 12:01 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தை முடித்த பிறகு ஜெயம் ரவி அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் `சங்கமித்ரா' படப்பிடிப்பில் கலந்து கொள் இருக்கிறார்.
ஜெயம் ரவியின் 24-வது படத்தின் முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
December 13, 2017
Rating:

No comments:
Post a Comment