சீனா மின்சார ஸ்கூட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழப்பு
சீனாவின் பீஜிங் அருகே உள்ள கிராமத்தில் மின்சார ஸ்கூட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் வீட்டில் இருந்த ஐந்து பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனா தலைநகர் பீஜிங் அருகே உள்ள பைகியாசிங் என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த மின்சார ஸ்கூட்டரில் இருந்து இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீ வீடு முழுவதும் பரவியது. இந்த கோர விபத்தில் வீட்டில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் இதே நகரில் தெற்கு பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்து குடியிருப்பவர்கள் ஆகும். இந்த விபத்தை அடுத்து பீஜிங் நகர நிர்வாகம் 40 நாள் சிறப்பு ஆபரேஷன் ஒன்றை நடத்தியது.
குடியிருப்பு வளாகங்களில் தீ அணைப்பு வசதிகள், அவசர கால வழிகள் ஆகியன இருக்கிறதா? என்றும், இல்லாத குடியிருப்புகளில் அவை அமைக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சீனா மின்சார ஸ்கூட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
December 13, 2017
Rating:

No comments:
Post a Comment