ஆரோக்கியமாக வாழ தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்! -
- வேலை செய்யும் இடத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காதீர்கள். கொஞ்சம் ரிலாக்ஸாக அலுவலகத்துக்குள் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். காபி மிஷினில் காபி அருந்துவது. க்ளைண்ட் அழைப்பை ரிலாக்ஸ் ரூமில் இருந்த படி பேசுவது போன்றவைகளை உங்கள் இருக்கையை விட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களாக்கி கொள்ளுங்கள்.
- அலுவலகத்தில் லிஃப்ட் வசதி இருந்தால் தயவு செய்து காலையில் மட்டும் அதனை பயன்படுத்தாதீர்கள். முடிந்த வரை சீக்கிரம் வந்து படிகளில் ஏறி செல்வதை பழக்கப்படுத்தி கொள்ளுங்கள். அது உங்களை முழு கவனத்தையும் வேலையில் செலுத்த உதவி செய்யும்.
- மாலை வீட்டுக்கு செல்லும் போது உங்கள் வாட்டர் பாட்டில் காலியாக உள்ளதா என்பதை செக் செய்யுங்கள். இல்லை என்றால் உங்கள் உடலுக்கு கட்டாயம் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னை வரும். அதனால் அதிகமாக தண்ணீர் அருந்துங்கள்.
- முழு கவனத்துடன் பணிபுரிய வேண்டும் என்று எப்போது ஹெட்போனுடன் இருக்காதீர்கள். அது உங்கள் கேட்கும் திறனை பலவீனமாக்கும். ஹெட்போனை தவிப்பது நல்லது.
- இரவு பணி முடிந்து அதிக நேரம் கழித்து உறங்க செல்லாதீர்கள். குறைந்த பட்சம் 7-8 மணி நேர தூக்கத்தை உறுதி செய்யுங்கள்.
- உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணி செய்யும் இடத்திலேயே சாப்பிடாதீர்கள் அது முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் அதனால் அமைதியாக உணவருந்துங்கள். கூடிய மட்டும் வீட்டு உணவை சாப்பிடுங்கள் வெளி உணவை தவிர்ப்பது நல்லது.
- அதிகமாக யோசிக்காதீர்கள். வேலை, குடும்பம், நண்பர்கள், காதல் இந்த விஷயங்களில் எல்லாம் அதிகமாக யோசித்து வெறுப்பாகாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்தது போல் யாரும், எதுவும் நடக்கவில்லை என்றால் கூலாக விடுங்கள். அதிகம் யோசித்தால் மூளையின் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
- புதிய பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், புத்தகம் படிப்பது, படம் வரைவது, வாக்கிங் செல்வது போன்ற தொழில்நுட்பம் தொடர்பில்லாத விஷயங்களாக இருக்க வேண்டும் அது உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பெருக்கும்.
- உங்கள் உணவில் ஒரு பழத்தை கண்டிப்பாக சேர்த்து கொள்ளுங்கள். அது சிறந்த உணவு முறைகளில் ஒன்று.
- சமூக வலைதளங்களுக்கு குட் நைட் சொல்ல பழகுங்கள். இரவு 9 மணியோடு சமூக வலைதளங்களைவிட்டு குடும்பத்தோடு செலவிட வேண்டும் என முடிவெடுங்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை சிறிய இடைவேளைகளில் சமூக வலைதளங்களை அணுகுங்கள். அது உங்களை கிரியேட்டிவாக சிந்திக்க வைக்கும்.
ஆரோக்கியமாக வாழ தினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்! -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment