ஸ்ரீதேவி முதல்... குளியலறையில் மரணித்த பிரபலங்கள் ஓர் பார்வை -
அதில் முக்கியமான சில நட்சத்திர பிரபலங்களின் திடீர் மரணமும் அதன் பின்னணி தகவல்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
ஜிம் மொரிசன்
1960-களில் அமெரிக்காவின் பிரபல பாடகராக வலம் வந்த இவரின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது என கூறலாம்.இளம் வயதிலேயே பல சாதனைகளை படைத்துள்ள இவருக்கு போதை பழக்கம் அதிகமாக இருந்துள்ளது.
பிரான்ஸ் வீட்டின் குளியலறை பாத் டப்பில் சடலமாக மிதந்த இவரின் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணமாக கூறப்பட்டுள்ளது. ஜிம் மொரிசன் இறக்கும்போது அவருக்கு வயது 27 என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா ராஜ்வன்ஷ்
பாலிவுட் நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருந்த பிரியா, மும்பையில் உள்ள சேட்டன் ஆனந்த் பங்களாவில் கடந்த 2000-ஆம் ஆண்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.குடும்ப சொத்து தகராறில் அவரின் சகோதரரே அவரை கொன்று விட்டதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஜூடி கர்லாண்ட்
Wizard of Oz திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த ஜூடி, கடந்த 1969 லண்டனில் உள்ள அவரின் வீட்டு குளியலறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.அளவுக்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டது தான் அவரின் மரணத்துக்கு காரணம் என மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன.
எல்விஸ் பெர்ஸ்லி
அமெரிக்க பாடகரான எல்விஸ் தனது 42-வது வயதில் மரணித்துள்ளார். தனது வீட்டு குளியலறையில் வாந்தி எடுத்த நிலையில் எல்விஸின் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஒயிட்னி ஹவுஸ்டன்
அமெரிக்க பாப் பாடகரான ஒயிட்னி கடந்த 2012-ஆம் ஆண்டு மரணமடைந்தார். வீட்டு குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட இவரின் மரணத்திற்கும் அளவுக்கு அதிகமான போதை பொருள் உபயோகித்தது தான் காரணமாக கூறப்பட்டுள்ளது.ஸ்ரீதேவி
இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக கோடிக் கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவி சில தினங்களுக்கு முன்னர் தான் மறைந்தார்.குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, ஓட்டல் குளியலறையில் சடலமாக கிடந்துள்ளார்.
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு முதலில் மாரடைப்பு காரணமாக கூறப்பட்டிருந்த நிலையில் உடலில் மது(Alcohol) இருந்ததாகவும் அவர் தவறுதலாக நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீதேவி முதல்... குளியலறையில் மரணித்த பிரபலங்கள் ஓர் பார்வை -
Reviewed by Author
on
February 28, 2018
Rating:
No comments:
Post a Comment