கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது -
குறித்த விபத்து நேற்று மாலை ஏற்பட்டிருந்த நிலையில் இதில் பலியானவர்கள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
இதில், யக்கல - கிரிந்திவெல பகுதியை சேர்ந்த வசந்த ரஜித்சந்திர வனசிங்க (34 வயது) என்ற 2 பிள்ளைகளின் தந்தையும், கம்பஹா நெதும்கமுவ பகுதியை சேர்ந்த பியுமிரான் பிரசாந்தி பெரேரா (24 வயது) எனும் பெண்ணும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் தனது வீட்டில், மரண வீடொன்றிற்கு செல்வதாககூறிவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பஹா கூட்டுறவு சங்கத்தில் இலிகிதராக கடமையாற்றிய குறித்த பெண்ணும், அதே கூட்டுறவு சங்கத்தில் பரிசோதகராக கடமையாற்றிய 2 பிள்ளைகளின் தந்தையும் பயணித்த காரே விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. அந்த பெண் காரை செலுத்தி சென்ற போதே விபத்து சம்பவித்துள்ளது.
இந்த நிலையில் ஆற்றின் ஆழத்தில் சுழியில் சிக்கியிருந்த காரிலிருந்து பெண்ணின் சடலத்தை பிரதேச இளைஞர்களும், பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்திருந்தனர்.
இதனையடுத்து கடும் சேதமாகியிருந்த காரையும் மீட்டுள்ளதுடன், இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமும் மீட்கப்பட்டிருந்தது.
கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது -
Reviewed by Author
on
February 20, 2018
Rating:

No comments:
Post a Comment