நீலகண்டனின் மறைவுக்கு இந்து குருமார் அமைப்பு அனுதாபம் -
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவரும், இந்து வித்தியாபிவிருத்திச் சங்க தலைவரும், திருக்கேதீச்சர திருப்பணிச் சபையின் தலைவருமான கந்தையா நீலகண்டனின் மறைவுக்கு இந்து குருமார் அமைப்பு அனுதாபம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் இன்று அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“இந்து மக்களிடையே புற சமயங்களின் ஆதிக்கத்தினால் இந்து நெறிக்கு குந்தகம் ஏற்படுத்துவதை தடுப்பதற்காக தனது சட்டத்துறையின் சீரான அறிவால் இந்து நெறி வாழ்வை நெறிப்படுத்துவதில் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை செலவிட்டு போராடிக்கொண்டிருந்த நீலகண்டனின் அமரத்துவம் நமக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
அன்னாரின் பிரிவால் துயருறும் அவர்தம் குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்திருந்த துறை அலுவலர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தை இலங்கை இந்துமார் அமைப்பு தெரிவிக்கின்றது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகண்டனின் மறைவுக்கு இந்து குருமார் அமைப்பு அனுதாபம் -
Reviewed by Author
on
February 20, 2018
Rating:

No comments:
Post a Comment