கிங்கான புவனேஷ்வர் குமார்: புதிய சாதனை படைத்து அசத்தல் -
இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில், இந்தியா 203 ஓட்டங்கள் குவித்தது.
தொடர்ந்து விளையாடிய தென் ஆப்ரிக்காவின் ஹென்ரிக்ஸ்(70), பெஹர்தின்(39) என ஓட்டங்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியை கேள்விக்குறியாக மாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறப்பாக பந்து வீசிய புவனேஷ்வர் குமார் ஹென்ரிக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார்.
அவர் முதல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, மற்றொரு முக்கிய விக்கெட்டான கிளாசன்(16), மோரிஸ்(0) விக்கெட்டுகளையும் வீழ்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மட்டுமின்றி கிரிக்கெட்டின் அனைத்து ரக போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 4 முறையும், ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் தலா ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிங்கான புவனேஷ்வர் குமார்: புதிய சாதனை படைத்து அசத்தல் -
Reviewed by Author
on
February 19, 2018
Rating:

No comments:
Post a Comment