தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயநலத்திற்காக கொள்கையை கைவிட்டுவிட்டது: சி.வி. விக்னேஸ்வரன் -
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி தமக்கும் நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
என்னதாக இருந்தாலும் ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது. பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும்.
சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி.யின் ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை.
எனினும், கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், கூட்டமைப்புக் கொள்கைகளை கைவிட்டு சுயநலங்கள் தான் எமக்கு முக்கியம் என்ற கருத்து ஏற்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயநலத்திற்காக கொள்கையை கைவிட்டுவிட்டது: சி.வி. விக்னேஸ்வரன் -
Reviewed by Author
on
March 28, 2018
Rating:

No comments:
Post a Comment