அண்மைய செய்திகள்

recent
-

ஜேர்மனியில் பரவும் புதுவித நோய்: மக்கள் அச்சம் -


ஜேர்மனியில் Borna என்னும் வைரஸ் தொற்றுநோய் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Borna வைரஸ் பொதுவாக விலங்குகளை மட்டுமே தாக்கும், ஆனால் சமீப காலமாக அது மனிதர்களிடையே பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஜேர்மனியில் Borna வைரஸ் தாக்குதலால் மூன்று பேர் உயிரிழந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இதுவரை நான்கு பேருக்கு இந்நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் ஒரே நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற்றவர்கள் என்று ஐரோப்பிய யூனியனின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.


GETTY

இறந்த நோயாளிகளின் உடலிலிருந்து மிகப் பெருமளவிலான வைரஸ் ஜீனோம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது.
இதற்குமுன் குதிரைகள் மற்றும் ஆடுகளின் உடலிலிருந்துதான் போர்னா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
குதிரைகளில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. நோய் பாதித்த குதிரைகள் நடப்பதிலும் நடந்து கொள்வதிலும் பிரச்சினைகள் இருப்பதாகவும் பெரும்பாலும் அவை இறந்து விடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் shrew என்னும் எலி போன்ற விலங்குகளின் எச்சத்திலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுகிறது. ஆனால் அவை மனிதனுக்கு எப்படி பரவுகின்றன என்பது இதுவரை புரியவில்லை. Leipzigக்கு அருகிலுள்ள Borna என்னும் இடத்தின் நினைவாக அந்த வைரஸுக்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது போர்னா வைரஸ் தாக்குதலால் இறந்த மூவருமே அணில்களை வளர்ப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


GETTY

ஜேர்மனியில் பரவும் புதுவித நோய்: மக்கள் அச்சம் - Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.