அண்மைய செய்திகள்

recent
-

நெஞ்சு எலும்பை உடைத்து ஜெயலலிதாவிற்கு ஆபரேஷன்: வெளியான தகவல் -


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மங்கள் நிலவி வரும் நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
விசாரணை கமிஷன் முன் ஆஜராகி வரும் சில முக்கிய நிர்வாகிகள், நாங்கள் ஜெயலலிதாவை இத்தனை முறை பார்த்தோம். இந்த அமைச்சர்கள் எல்லாம் மருத்துவமனையில் அவரை பார்த்தார்கள் என தினம் ஒரு தகவலை போட்டு உடைத்தனர்.

அந்த வகையில் தமிழக முன்னாள் தலைமை செயலாலரான ராமமோகன ராவ் கமிஷனில் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் பல பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அப்பல்லோவில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலேயே அவருக்கு அவசர ஆபரேஷன் செய்ய திட்டமிட்ட மருத்துவர்கள் அவரது நெஞ்சு பகுதியை உடைத்து இதயத்தில் கருவிகளை பொருத்தினர்.
அதனால் ஏராளமான ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது, இதை பார்த்து பதறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபரேஷனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் எக்மோ கருவியை ஜெயலலிதாவுக்கு பொருத்தி 24 மணிநேரம் அதன் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும் என கூறினர்.
ஆனாலும் 24 மணிநேரம் கடந்த பின்னரும் இதயத்தின் செயல்பாட்டில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறியுள்ளார்.

நெஞ்சு எலும்பை உடைத்து ஜெயலலிதாவிற்கு ஆபரேஷன்: வெளியான தகவல் - Reviewed by Author on March 29, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.