துப்பாக்கியைக் காட்டி என்னை மிரட்டினார்: சிறீதரன் எம்.பி முறைப்பாடு -
கிளிநொச்சி வனவளத்திணைக்கள அதிகாரி என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் என பிரதமரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட அவர் தன்னிடம் இவ்வாறு நடந்து கொண்டார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், பிரதமரிடம் இந்த முறைப்பாட்டை தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “குறித்த அதிகாரி ஒரு மனிதரை போல நடந்துகொள்ளவில்லை, பிஸ்டலுடன் என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து மிரட்டினார்.
அவர் ஒரு தமிழ் அதிகாரி. அவர் மக்களின் நலன்களுக்கு புறம்பாகவே நடந்துகொள்கின்றார். இவரின் செயற்பாடு காணி இல்லாத மக்களுக்கு காணி வழங்குவதற்கு தடையாக இருக்கிறது” என சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த விடயம் தொடர்பில் ஆளுநர் மற்றும் பொலிஸாருக்கு முறையிடுமாறும் தன்னால் விசாரணை செய்ய முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கியைக் காட்டி என்னை மிரட்டினார்: சிறீதரன் எம்.பி முறைப்பாடு -
Reviewed by Author
on
May 29, 2018
Rating:

No comments:
Post a Comment