லண்டன் மாநகரில் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா -
பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் வட லண்டன் என்பீல்ட் பகுதியில் குடிகொண்டிருக்கும் நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எதிர்வரும் 29 ஆம் திகதி விநாயகர் வீதி உலா நடைபெறவுள்ளது. மறுநாள் 30 ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து ஜூலை முதலாம் திகதி முதல் இடப வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், நாக வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் என 7 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.
அதனை தொடர்ந்து, திருவிழாவின் 9வது நாளான 8 ஆம் திகதி பக்தமுக்தி பாவனோற்சவம், 9 ஆம் திகதி மஞ்சத் திருவிழா, 10 ஆம் திகதி குமாரி பூஜை, 11 ஆம் திகதி வசந்தோற்சவம், 12 ஆம் திகதி வேட்டை திருவிழா, 13 ஆம் கற்பூர சட்டி திருவிழா, 14ம் திகதி சப்பறத்திருவிழா, 15 ஆம் திகதி தேர் திருவிழா, 16 ஆம் திகதி தீர்த்தம், பஞ்சமூர்த்தி பவனி, கொடியிறக்கம், 17 ஆம் ஆம் திகதி பூங்காவனம் 1008 சங்காபிஷேகம் நடைபெறவுள்ளதுடன் 18 ஆம் பைரவர் மடை நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைய உள்ளது.
ஐரோப்பாவில் அருள் பாலிக்கும் அன்னை நாகபூசணஜ ஆலயத்தின் திருவிழாவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய அறங்காவலர் சபை லண்டன் வாழ் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
2002ம் ஆண்டு தாயகத்தில் போர் உக்கிரமாக நடைபெற்ற போது புலம்பெயர்ந்து வாழும் மக்களின் சந்ததிகளின் வாழ்வாதார நம்பிக்கைகளை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்ப்பற்றும், தெய்வீகப்பற்றும் கொண்ட 9 பேரை கொண்டு இந்து தமிழ் கலாச்சார சங்கம் (என்பீல்ட்) தாயக நலன் விரும்பிகளால் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது குறிப்படத்தக்கது.
லண்டன் மாநகரில் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா -
Reviewed by Author
on
June 28, 2018
Rating:

No comments:
Post a Comment