தினசரி 40 சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் 2 வயது சிறுவன்:
இந்தோனேசியாவில் இரண்டரை வயது சிறுவன் ஒருவர் தாயாரின் ஷாப்புக்கு பக்கத்தில் சிகரெட் துண்டுகளை விளையாட்டாக பொறுக்கி அதை புகைத்து வந்துள்ளான்.
ஆனால் சில நாட்களிலையே அந்த போதையில் சிக்குண்ட Rapi Ananda Pamungkas என்ற அந்த 2 வயது சிறுவன், தாயாரின் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து சிகரெட்டுகளை பெற்று புகைக்கத் துவங்கியுள்ளான்.
சிறுவனுக்கு சிகரெட் வழங்குபவர்கள் அவனது வேடிக்கையான நடவடிக்கைகளை பார்த்து வெடித்துச் சிரித்து ஊக்கமூட்டியுள்ளனர்.
சில நேரம் புகைக்க சிகரெட் கிடைக்காதபோது அடம்பிடித்துள்ளதாகவும், கட்டுப்படுத்த முடியாது போவதால் நாள் ஒன்றுக்கு 2 பாக்கெட் சிகரெட் வாங்குவதாகவும் சிறுவனின் தாயார் ஒப்புக்கொண்டுள்ளார். டீ குடிக்கும் போது அல்லது கேக் சாப்பிடும்போதும் சிறுவன் புகைப்பதாக கூறும் அவனது தாயார், கடந்த 2 மாதங்களாக தினசரி சிகரெட் புகைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவன் சிகரெட் கேட்கும்போது இல்லை என்றால் வன்முறையில் இறங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது தினசரி 40 சிகரெட்டுகள் புகைக்கும் சிறுவனின் தந்தையும் புகைக்கு அடிமைதான் என்றாலும், தமது மகனின் இந்த பழக்கத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை என்றார்.
உலகில் மிக அதிக சிகரெட் புகைக்கும் நபர்கள் கொண்ட நாடு இந்தோனேசியா. மட்டுமின்றி இந்தோனேசிய மக்கள் தொகையில் 19 வயதுக்கும் குறைவான சுமார் 9 விழுக்காட்டினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமைகளாக உள்ளனர்.
தினசரி 40 சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் 2 வயது சிறுவன்:
Reviewed by Author
on
August 16, 2018
Rating:

No comments:
Post a Comment