இரண்டு போராளிகளின் தாயாருடைய இன்றைய அவல நிலை!
இந்நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் தாய் ஒருவர் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஆறு வருடங்கள் கடந்த நிலையிலும் முல்லைத்தீவில் தற்காலிக ஓலைக் குடிசையில் மிக துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பொதுமக்களும் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்னர். இவர்களை அரசியல்வாதிகள் சென்று பார்ப்பதில்லை எனவும், இவர்களின் பிள்ளைகள் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்து இறந்தவர்கள் என்பதால் உதவி செய்ய அரச அதிகாரிகள் பின்நிற்கின்றனர்.
இவ்வாறு யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கணவன் மற்றும் பிள்ளைகளை இழந்து தனித்து வாழ்வதனாலேயே தாம் புறக்கணிக்கப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
இது தொடப்பில் புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தில் வசிக்கும் தாய் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போரிட்ட எனது இரண்டு ஆண் பிள்ளைகளும் மரணமடைந்துள்ளனர். எனது கணவன் 2009 இறுதியுத்தத்தின் போது எறிகணைத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.
இதன்போது படுகாயமடைந்த நான் 2012ஆம் ஆண்டு எனது சொந்த ஊரில் தனிமையில் மீள்குடியேறி நிர்க்கதியாக வாழ்ந்து வருகின்றேன்.
தனித்து வாழும் காரணத்தினால் இதுவரை நிரந்தர வீடு எனக்கு வழங்கப்படவில்லை. மேலும் வாழ்வாதார பயிர்செய்கையை மேற்கொண்டு எனது அன்றாட உணவுத்தேவையை பூர்த்தி செய்யக்கூட எனது காணியில் ஒரு கிணறு இல்லை.
இவ்வாறு அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் நான் வாழ்ந்து வருகின்றேன். அரசியல் கட்சிகள் அரச அதிகாரிகள் நிறுவனங்கள் எதுவும் எம்மை கவனிக்கவில்லை, என தனது துயரங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டு போராளிகளின் தாயாருடைய இன்றைய அவல நிலை!
Reviewed by Author
on
August 16, 2018
Rating:

No comments:
Post a Comment