இயற்கை முறையில் பற்களை பளிச்சென்று பராமரிக்க உதவும் சில வழிகள் -
பற்களை பளிச்சென்று பராமரிக்க உதவும் வழிகள்
- பற்களை ஆரோக்கியமாக பரமாரிக்க பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வது மிகவும் நல்லது.
- உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும்.மேலும் சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளான இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
- வெண்ணெய், கொய்யா, வாழைப்பழம், பால் போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் மிகுதியாக உள்ளதால் இவற்றை அதிக அளவில் உண்ணலாம்.
- ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படமால் இருக்க வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.
- தினமும் இரண்டு வேளை பற்களையும் நாக்கையும் சுத்தம் செய்வதின் மூலம் பற்களை ஆரோக்கியமாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ளலாம்.
- பற்களை சுத்தம் செய்யும் பொழுது சரியான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவில் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- தினமும் அதிக அளவு காபி மற்றும் மாதுபானங்கள் உட்கொள்வதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அவை இரண்டும் கால்சியத்தின் அளவை குறைத்து பற்கள் மற்றும் ஈறுகளில் சிதைவை ஏற்படுத்தும்.
- பற்களிலோ அல்லது ஈறுகளிலோ அடிக்கடி ரத்தக் கசிவு அல்லது பற்களில் வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.
- பற்களின் வலிமைக்காக பயன்படுத்தப்படும் பற்பசை மற்றும் ப்ரஷ்ஷை சிறந்த பல் மருத்துவர்களின் பரிந்துரை படி பயன்படுத்த வேண்டும்.
- பற்கள் மிகவும் கடினமான பொருட்களை கடிக்கும் பொழுது உடைய நேரிடும். எனவெ பற்களை உணவுப் பொருட்களை மட்டும் உட்கொள்ள பயன்படுத்த வேண்டும்.
- புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துதல் ஆகிய இரண்டும் வாய் புற்றுநோய் வர முக்கிய காரணமாக உள்ளது. எனவெ புகைத்தல், மது அருந்துதல் கூடாது.
- மருத்துவரதியாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் சிறந்த பல் மருத்துவரிடம் முன்பே தெரிவிப்பது மிகவும் சிறந்தது.
- பற்களில் உணவு பொருட்கள் சிக்கி கொள்ளும் பொழுது அதனை எடுக்க பற்குச்சிகளை பயன்படுத்துவது மிகவும் தவறு. ஏனெனில் பற்குச்சிகள் பயன்படுத்தும் பொழுது பற்கள் மற்றும் ஈறுகள் பாதிப்பு அடைகின்றன.
- இரவு நேரங்களில் பற்களை கடிக்கும் பழக்கமோ அல்லது குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்கள் சிறந்த பல் மருத்துவரை அணுகி பலன் பெறலாம்.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி பற்களை பரிசோதனை செய்து பல் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் சிதைவுகளை தடுக்கலாம்.
இயற்கை முறையில் பற்களை பளிச்சென்று பராமரிக்க உதவும் சில வழிகள் -
Reviewed by Author
on
September 27, 2018
Rating:

No comments:
Post a Comment