மன்/பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு---படங்கள்
சர்வதேச சிறுவர் தினமான 01/10/2018 மடுக்கல்வி வலயத்தில் வட்டக்கண்டல் அஞ்சல் பிரிவில் அமைந்துள்ள மன்/ பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க.பாடசாலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது
பாடசாலை அதிபர் திரு F. X.அன்ரன் சேவியர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம, விருந்தினராக மன்னார் மாவட்ட யதீஸ் மாணவர் தொண்டு நிறுவனத்தின் பணிப்பாளர் தேச கீீர்த்தி, தேச அபிமானி திரு S. R. யதீஸ் அவர்களும் அவர்தம் பாரியார் அவர்களும்
கௌரவ விருந்தினராக மடுக்கல்வி வலயத்தின் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் திரு.பொஸ்கோ அவர்களும் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்களும் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் பாடசாலை அதிபர் திரு F.X.அன்ரன் சேவியர் அவர்களின் உரையின் சாரம்சமாக எதிர்கால இலத்திரணியல் உலகுக்கு சிறுவர்களை தயார் படுத்த பெற்றோர்களும் அதிபர் ஆசிரியர்களும் அர்ப்பணிப்புடன் இன்று இருப்பதை விட பல மடங்கு வேகமாக பணியாற்ற அழைப்புவிடுத்தார்
பிரதம விருந்தினர் திரு.S.R.யதீஸ் அவர்களின் உரையின் சாரம்சமாக பிள்ளைகள் சாதனைகளை படைக்க வேண்டுமாயின் முதலில் வீட்டு சூழலும், பெற்றோர் அடங்கலாக சொந்தங்களின்ஆரோக்கியமான சூழலும் பெரும் பங்குவகிக்கின்றது ஆகவே அந்த சூழலை நல்லமுறையில் பேணிப்பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த அழைப்பு விடுத்தார்
மாணவர்களின் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகளும் ஞாபகச்சின்னங்கள் வழங்கியும் இனிதே நிகழ்வுகள் நிறைவடைந்தன.
மன்/பாலையடிப்புதுக்குளம் றோ.க.த.க பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு---படங்கள்
Reviewed by Author
on
October 02, 2018
Rating:

No comments:
Post a Comment