கிளிநொச்சி துயிலுமில்லத்தில் ஒலித்த விடுதலைப் புலிகளின் பாடல்! -
இதன்போது, தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே.. இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? என்ற துயிலுமில்லம் பாடல் ஒலித்தது.
கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி ஆயிரக்கணக்கான உறவுகள் பிற்பகல் 3.00 மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்தனர்.மணியோசை எழுப்பட்டு பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன், பிரிகேடியர் தீபன் ஆகியே மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை ஏற்றி வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து, துயிலுமில்ல பாடலுடன், உறவுகள் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.
இதேவேளை, இன்று மிகவும் அமைதியாக எவ்வித நெருக்கடிகளும் இன்றி 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி துயிலுமில்லத்தில் ஒலித்த விடுதலைப் புலிகளின் பாடல்! -
Reviewed by Author
on
November 28, 2018
Rating:

No comments:
Post a Comment