மன்னார் பேசாலை 4ம்வட்டார முக்கிய வீதி முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் நிதியில் கார்பட் வீதியாக....
மன்னார் பேசாலை மீனவர்களும் இவ் பகுதியின் நான்காம் வட்டார குடி மக்கள் வாழும் முக்கியமான சென்.ஜோசவ் வீதியானது நீண்ட காலமாக சீரற்று காணப்பட்டபோது இவற்றை புனரமைத்து தரும்படி இப்பகுதி மக்களால் வேண்டுகோள் விடுக்கப்படடிருந்தது.
இதன் அடிப்படையில் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி ஆர்
டிப்னா குரூஸ் மற்றும் என்.செபமாலை பீரீஸ் ஆகியோர் மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் அமைச்சரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 71 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கார்பட் வீதி அமைப்பதற்கான ஆரம்ப வேலை திங்கள் கிழமை (26.11.2018) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பேசாலை உதவி பங்கு தந்தை அருட்பணி பசில் கிளைன் அடிகளார் மத வழிபாட்டுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான திருமதி ஆர் டிப்னா குரூஸ் மற்றும் என்.செபமாலை பீரீஸ் ஆகியோருடன் அப்பகுதி பொது மக்களும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மன்னார் பேசாலை 4ம்வட்டார முக்கிய வீதி முன்னாள் அமைச்சர் ரிசாட்டின் நிதியில் கார்பட் வீதியாக....
Reviewed by Author
on
November 28, 2018
Rating:
No comments:
Post a Comment