சீமான் வெளியிட்ட அறிக்கை -
செந்தமிழன் சீமானுக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தந்தையான மகிழ்ச்சியில் இருக்கும் அவர் தைப்பூசம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எங்களுடைய இறையோனின் தேடல். நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது.
அந்த இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அந்த இறையோனே தமிழர் இறை முருகன் ஆவார்.
தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டற கலந்ததற்கான சான்று.
அப்படிப்பட்ட தமிழர் இறை முருகனை எதிர்வரும் தை மாதம் 7 ஆம் திகதி (21/01/2019) தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள், தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் தமிழர் இறை முருகனை வணங்கி, முருகனின் பெரும்புகழைப் போற்றி கொண்டாட இருக்கிறோம்,
அந்த பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான "வேல்" ஐ நிறுவி வழிபட இருக்கிறோம், வேல் என்னும் சொல் 'வெல்' என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள்.
எனவே வேல் என்றால் வெற்றி. அந்த வேல் எடுத்து வரலாற்று தொன்மை மிக்க தமிழ் தேசிய இனத்தின் பண்பாடு மற்றும் வழிபாட்டு விழுமியங்களை மீட்டெடுப்போம்.
ஆகையால் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5, 6 மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து "வேல்" நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்தி சிற்றுண்டி உணவுகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்து பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்ட அறிக்கை -
Reviewed by Author
on
January 14, 2019
Rating:

No comments:
Post a Comment