பிரேஸில் சிறைச்சாலைகளில் மோதல் – 40 பேர் உயிரிழப்பு!
பிரேஸிலிலுள்ள சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல்களில் 40 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமேசோனாஸ் மாகாண தலைநகர் மனாயஸ்சிலுள்ள 4 சிறைச்சாலைகளிலேயே நேற்று(திங்கட்கிழமை) இவ்வாறு கைதிகளுக்கிடையே மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஒரு சிறைச்சாலையில் மாத்திரம் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது 100 இற்கும் மேற்பட்ட கைதிகள் காயமடைந்த நிலையில், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரேஸில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேஸில் சிறைச்சாலைகளில் மோதல் – 40 பேர் உயிரிழப்பு!
Reviewed by Author
on
May 29, 2019
Rating:

No comments:
Post a Comment