அமைச்சர் ரிஷாட் தனது ஆதரவாளர்களுக்குவிடுத்துள்ள வேண்டுகோள் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
என் மீது என்னுடைய ஆதரவாளர்கள் வைத்துள்ள அன்பு உண்மை என்றால் தயவு செய்து மற்ற அரசியல் தலைமைகளை வீணாக விமர்சிக்க வேண்டாம். அது சிறந்த பண்பல்ல.
ஆகவே பொதுப்படையாக உள்ள மக்கள் யார் சரி, பிழை என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள்.
நீங்கள் என்மீது வைத்துள்ள அதிக அன்பின் காரணமே என்னை தேவையற்ற முறையில் விமர்சிக்கும் உறவுகளிடம் நீங்கள் முரண்படுகின்றீர்கள். அதுவே எமக்கு பாரதூரமாக ஆகிவிடும்.
தயவு செய்து எல்லா வல்ல இறைவன் மீது பாரத்தை கொடுத்து விட்டு மிக பொறுமையுடன் செயற்படுங்கள். அதுவே சிறந்தது என தனது ஆதரவாளர்களிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்கட்சியின் உயர் மட்ட அதிகாரியொருவர் இன்று தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் தனது ஆதரவாளர்களுக்குவிடுத்துள்ள வேண்டுகோள் -
Reviewed by Author
on
May 30, 2019
Rating:

No comments:
Post a Comment