கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இந்த ஜூஸை குடிங்க -
கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த ஜங்க் உணவுகளை உட்கொள்ளுவதே கொலஸ்ட்ரால் வர முக்கிய காரணமாகும். இதனால் இரத்தக் குழாய்களில் கொழுப்புக்கள் படிந்து, இதய நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதிலிருந்து விடுபட என்னதான் செயற்கை மருந்துகள் எடுத்தாலும் இது நாளடைவில் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.
இதற்கு சத்து நிறைந்த பழங்களில் கிவி பழம் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.
கிவி பழத்தில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், குளோரைடு, காப்பர், குரோமியம், ஃப்ளூரைடு, அயோடின், இரும்புச்சத்து, மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், ஜிங்க் போன்றவை அடங்கியுள்ளது.
அந்தவகையில் தற்போது கிவி பழத்தினை கொண்டு ஜூஸை எப்படி தயாரிப்பது என்பது பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
- கிவி பழம் - 1
- பெங்களூர் தக்காளி - 2
- ஆப்பிள் - 1
- இஞ்சிச் சாறு - 1/4 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1 சிட்டிகை.
செய்முறை
ஆப்பிளின் விதைகளை நீக்கி நடுப்பகுதியை தனியே எடுத்துக் கொள்ளவும்.கிவி பழத்தின் தோலை நீக்கிக் கொள்ளவும்.
பிறகு மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள், கிவி பழம், தக்காளியைச் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
இதனுடன் இஞ்சிச்சாறு, தேன், மிளகுத்தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இதேவையெனில் சிறிது நேரம் ஃபிரிட்ஜில் வைத்துக் கூலாகக் குடிக்கவும்.
குறிப்பு: விட்டமின் சி மற்றும் zinc நிறைந்த கிவி பழம் ஆண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த வேண்டுமா? அப்போ இந்த ஜூஸை குடிங்க -
Reviewed by Author
on
May 30, 2019
Rating:
No comments:
Post a Comment