300 மீட்டர் உயரம்.. மலைகளுக்கு நடுவில் கயிற்றில் நடந்த 20 பேர்:சாகச விளையாட்டு -
தெற்கு பிரன்சின் ஆல்ப்ஸ், செயிண்ட்-ஜானெட் மலை சிகரத்தில் இந்த சாகச விளையாட்டு நடைபெற்றது. Ata Slack என்ற கயிற்றின் மீது நடக்கும் சங்கம் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
உலக வேக சாதனையை நிறுவும் நோக்கத்தை கொண்டு இந்த விளையாட்டு ஏற்பாடு செய்யப்பட்டதாக Ata Slack சங்கம் தெரிவித்துள்ளது. இரு மலைகளுக்கு கேபிள்களை நிறுவுவதற்கு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இரு செங்குத்தான மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில், 800 மீட்டர் நீளம் கொண்ட கயிற்றில் இந்த வீரர்கள் உரிய பாதுகாப்போடு நடந்து சாகசம் செய்தனர். இது ஒரு அதிகாரப்பூர்வ விதிமுறைகளைக் கொண்டிராக விளையாட்டு ஆகும்.
இதில் மட்டிஸ் ரெய்ஸ்னெர்(Mattis Reisner) என்ற மாணவர் ஒருவர் 19 நிமிடங்கள் 50 நொடிகளில் இந்த சாகசத்தை முடித்தார்.
300 மீட்டர் உயரம்.. மலைகளுக்கு நடுவில் கயிற்றில் நடந்த 20 பேர்:சாகச விளையாட்டு -
Reviewed by Author
on
June 10, 2019
Rating:

No comments:
Post a Comment