லண்டனில் பயங்கர தீ விபத்து -
கிழக்கு லண்டனின் Barking பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 3.31 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அறிந்து 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த 100 தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மாலை 6 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் விபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
240,000 பவுண்டுகள் மதிப்புள்ள படுக்கையறை முதற்கொண்டு இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகியிருக்கின்றன. இங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



லண்டனில் பயங்கர தீ விபத்து -
Reviewed by Author
on
June 10, 2019
Rating:
No comments:
Post a Comment