கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா.. தீவிர கண்காணிப்பில் 86 பேர்: பயத்தில் மக்கள் -
டெரோபஸ் குடும்பத்தைச் சேர்ந்த பழந்தின்னி வவ்வால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ், கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கி எடுத்தது. மலேசிய நாட்டில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் அங்கிருந்து கேரளா வந்திருக்கலாம் என கருதப்பட்டது.
இந்நிலையில், கேரளா, எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்து 23 வயது நபருக்கு நிபா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நான்கு பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 86 பேரை தீவர கண்காணிப்பில் வைத்துள்ளதாக அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
திருச்சூர், எர்ணாக்குளம் மற்றும் கோழிகோடு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள், நிபா வைரஸிக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நிபா வைரஸ் குறித்த விவரங்கள் அறிய தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 1077 மற்றும் 1056 எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மத்திய அரசாங்கம் அனைத்து ஆதரவையும் தரும் என அவர் உறுதியளித்துள்ளார்.
கேரளாவை மீண்டும் அச்சுறுத்தும் நிபா.. தீவிர கண்காணிப்பில் 86 பேர்: பயத்தில் மக்கள் -
Reviewed by Author
on
June 05, 2019
Rating:

No comments:
Post a Comment