இலங்கையை உலுக்கிய தற்கொலை குண்டுத் தாக்குதல்! விலை கொடுத்து வாங்கப்பட்டதா...?
ஈஸ்டர் தின தாக்குதல்கள் அனைத்தும் விலை கொடுத்து வாங்கப்பட்டதாக நான் கருதுகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தெரிவுக்குழுவில் வழங்கப்படுகின்ற சாட்சியங்களுக்கு பின்னால் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. அங்கு கொடுக்கப்படும் வாக்குமூலங்கள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.
எனவே இந்த தாக்குதல் சம்பவம் விலை கொடுத்து செய்யப்பட்ட விடயமாகவே நான் கருதுகின்றேன்.
ஏதோவொரு தேவைக்காக விலை கொடுத்து செய்யப்பட்டிருக்கின்றது. பயங்கரவாதிகள் கிறிஸ்தவ மக்களை ஏன் இலக்கு வைத்தார்கள்?
ஏன் அவர்கள் இந்த காலகட்டத்தை தேர்வு செய்தார்கள்? அச்சுறுத்தல் தொடர்பான புலனாய்வு தகவல்களை பாதுகாப்பு சபையில் தெரிவிப்பதற்கு ஏன் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
பொலிஸ் மா அதிபரை பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு ஏன் அழைக்கவில்லை. ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியும் ஜனாதிபதி ஏன் அது தெடர்பில் கவனமெடுக்கவில்லை?
இந்த விடயங்களை வைத்துப் பார்க்கும்போது இது விலை கொடுத்து வாங்கிய ஒரு வேலைத்திட்டம் என்றே தோன்றுகின்றது. எனவே இந்த தாக்குதல் எதற்காக செய்யப்பட்டது? யார் இதன் பின்னணியில் இருந்தார்கள் என்பதை கண்டறிவது மாத்திரம் தான் தற்பொழுது மிகுதியாக இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையை உலுக்கிய தற்கொலை குண்டுத் தாக்குதல்! விலை கொடுத்து வாங்கப்பட்டதா...?
Reviewed by Author
on
June 10, 2019
Rating:

No comments:
Post a Comment