தேரர்களின் அரசியல் நாட்டு மக்களுக்கு ஒரு சவாலாகவே அமையும் என்கின்றார் அமீர் அலி -
பௌத்த தேரர்களின் அரசியல் கொள்கை என்பது நாட்டு மக்களுக்கு ஒரு சவாலாகவே அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலொன்றின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
தேரர்கள் அரசியலில் ஈடுபடுவதும், அரசியல் சார்ந்த விடயங்களில் கருத்து தெரிவிப்பதும், பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதும் இந்த நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த விடயமாக அமையாது.
பௌத்த தேரர்கள் எவ்வாறான குற்றங்களை செய்தாலும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற விடயத்தினை ஜனாதிபதியே குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறான சூழ்நிலையில் ஞானசார தேரரின் விடுதலை பொருத்தமற்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தேரர்களின் அரசியல் நாட்டு மக்களுக்கு ஒரு சவாலாகவே அமையும் என்கின்றார் அமீர் அலி -
Reviewed by Author
on
June 10, 2019
Rating:

No comments:
Post a Comment